64 வருடங்களுக்குப் பிறகு புதிய வருமான வரிச் சட்டம்.. இதற்கு முன்பு புதிய விதிப்புகள் அமலுக்கு வரவில்லையா?

Author: Hariharasudhan
1 February 2025, 1:15 pm

அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய பட்ஜெட் 2025-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி: 2025- 2026ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, இன்று (பிப்.01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார். இது, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் ஆகும். இதில், வருமான வரி உச்ச வரம்பு குறித்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். குறிப்பாக, மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. மத்திய அரசின் இந்த வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு நேரிடும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Income Tax

மேலும், இதன்படி, ரூ.12 லட்சத்திற்கு மேல்,

ரூ.0 – 4 லட்சம் வரை – வருமான வரி இல்லை.

ரூ.4 – 8 லட்சம் வரை 5 சதவீதம் வருமான வரி.

ரூ.8 – 12 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரி

ரூ.16 – 20 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி

ரூ.20 – 24 லட்சம் வரை 25 சதவீதம் வருமான வரி

ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வானதிக்கு எதிராக திவ்யா சத்யராஜ்? சூடுபிடிக்கும் 2026 களம்!

மேலும், புதிய வருமான வரி சட்ட மசோதா அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இதுவரை 1961ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2010, 2017 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் புதிய வருமான வரிச் சட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றும், அதுபலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…