கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவி கிருபா (25) உடன் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதிக்கு சுற்றுலா சென்ற போது, சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் தங்கியுள்ளார்.
விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ்குமார் – கிருமா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர். அப்போது புதுமணப்பெண் கிருபாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தங்கள் வசம் வைத்திருந்த மருந்துகளை உட்கொண்டுள்ளார். எனினும் மூச்சுதிணறல் சரியாகாமல் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதையடுத்து, குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபா அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா..? அல்லது வேறு ஏதாவது காரணமா..? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்மநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா வந்த இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.