திருமணமாகி 15 நாட்களில் சாப்ட்வேர் பெண் உழியர் மர்மமான நிலையில் உயிரிழந்தது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தராமன் – ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இந்துஜா 27 என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்துஜா ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக இவர், பெரம்பூர் ஜமாலயா எஸ்பிஐ காலனியை சேர்ந்த ஹரிகரன் (30) என்ற நபரை காதலித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஹரிஹரன் வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மதியம் 1:30 மணியளவில் தனது கணவர் வீட்டில் இந்துஜா வொர்க் ஹோம் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார், அப்போது வீட்டில் இருந்த இந்துஜாவின் கணவர் ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இது குறித்து இந்துஜாவின் பெற்றோரும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இந்துஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்த ஒட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டேரி போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று இந்துஜாவின் உடலை ஆய்வு செய்து பிரேத பரிசோதனைக்கு போலீசார் இந்துஜாவின் உடலை உட்படுத்தி உள்ளனர்.
மேலும், திருமணம் ஆகி 15 நாட்கள் மட்டுமே ஆவதால் இந்த வழக்கை ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில் இந்துஜாவின் தாயார் ஆனந்தி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் எனவும் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து, திருமணம் ஆகி 15 நாட்களில் ஆன பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு போலீசார் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆர்டிஓ முன்னிலையில் பிரேதத்தை வைத்து உடல் கூறு செய்ய உள்ளதால் விசாரணைக்குப் பின்னரே பெண் உயிரிழந்தது குறித்து தெரியவரும்..
திருமணமாகி 15 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.