வடசென்னை பாஜக வேட்பாளருக்கு புதிய சிக்கல்.. பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 11:59 am

வடசென்னை பாஜக வேட்பாளருக்கு புதிய சிக்கல்.. பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு..!!!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக சமீபத்தில் அறிவித்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

வடசென்னை மக்களவை தொகுதியில், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

ஒட்டுமொத்த சென்னையும் தி.மு.கவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை தி.மு.கவின் உறுதியான கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது.

இந்நிலையில், வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…