விமான நிலையத்தில் புதிய நடைமுறை : போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்!!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2022, 2:45 pm
சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
விமான நிலையத்தில் நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை நிறுத்த ரூ. 230 கோடி மதிப்பீட்டில் ஆறு அடுக்குகள் கொண்ட அதிநவீன வாகன நிறுத்தம் கட்டப்பட்டது.
இந்த வாகனம் நிறுத்துமிடம் கடந்த ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைமுறைக்கு வந்தது.
சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், டோக்கன் பெற வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த வாகன ஓட்டிகள் கட்டண சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
அப்போது தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரில் துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மாற்று பாதையை ஏற்படுத்தி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் காரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.