பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.. ஃபெயில் ஆனால் இனி அதே வகுப்புதான்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 4:51 pm
பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இனி ஆல் பாஸ் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை முதலில் இருந்தது. ஆனால் இது கல்வித் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது ஆர்டிஇ என்ற கல்வி உரிமை சட்டம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும், அதில் தேர்ச்சி பெறாவிட்டால் மறு தேர்வு நடத்தி மறுபடியும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
ஒரு வேளை மறுதேர்வில் மீண்டும் தோல்வியடைந்தால் அந்த மாணவர்கள் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்தி விதிகளுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் என கருதுகின்றனர்.