காஞ்சிபுரம் : கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ரேஷன் கடையில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பஞ்சாயத்து உட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள்.
இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலித் தொழில் செய்து வருகின்றார்கள். ரேசன் பொருட்களை வாங்குவதற்கு நெடுஞ்சாலையை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரேசன்கடை கட்டப்பட்டது. தேர்தல் நேரத்தில் ரேஷன் கடை திறப்பது தள்ளி போனது. தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடை திறக்கப்படும் என கூறி 12 மாதம் கடந்து விட்டதால் தற்போது அந்த ரேஷன் கடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
அந்த திறக்கப்படாத ரேஷன் கட்டிடத்தில் மதுபானம் அருந்துவதன் கஞ்சா புகைப்பதும் வேதனைகள் நடப்பதும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனால் முத்து மரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கடை கட்டிடத்தின் முன்பு நின்று கடையை திறக்க கோரி கோஷமிட்டனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி பெண்கள் கூறும்போது, ரேஷன் கடை திறப்பதாக கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கூட கொடுத்தார்கள். ஆனால் இன்றைய தேதி வரை திறக்கப்படவில்லை.
அதனால் நாங்கள் நெடுஞ்சாலையை கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டும். அங்கும் ஒரே நேரத்தில் பொருட்கள் அளிப்பதில்லை. 4 அல்லது 5 முறையாவது செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே அதிக மக்கள் தொகை கொண்ட எங்கள் கிராமத்தில், நீண்ட நாட்களாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இந்த ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.