புத்தாண்டு கொண்டாட்டத்தில் அழகிகளுடன் நடனம்… ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஒப்பந்தம் ; சென்னையில் புது டிரெண்ட்…?
Author: kavin kumar31 December 2022, 8:05 pm
சென்னை ; புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாடல் அழகிகளை பணம் கொடுத்து அழைத்து வந்து நடனமாடச் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு பிறக்க உள்ளது. இதையொட்டி, இன்று நள்ளிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதற்காக, நட்சத்திர விடுதிகளில் ஆட்டம், பாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்பதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதுரு.
இவற்றில் ஜோடியாக சேர்ந்து நடனமாடும் கொண்டாட்டங்களில் வேறு யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த இடத்துக்கு ஜோடி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இதுபோன்ற ஜோடி நடன கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவதற்கு வாலிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் தங்களுடன் நடனமாட வாடகை ஜோடிகளை இளைஞர் புக் செய்து அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘மிடில் கிளாஸ்’ முதல் ‘ஹை கிளாஸ்’ நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இரவு நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடன நிகழ்ச்சிகள் முடிந்ததும் அழகிகளை பத்திரமாக வீட்டு அருகே கொண்டு விட்டு விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனேயே இதுபோன்ற அழகிகளை வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இது எந்த மாதிரியான கலாச்சாரத்திற்கு இளைஞர்களை அழைத்துச் செல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.