லேசர் ஒளி மூலம் புத்தாண்டு கொண்டாட்டம்.. வண்ண விளக்குகளால் மிளிர்ந்த கோவை : இளைஞர்கள் நடனமாடி உற்சாகம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 8:39 am

லேசர் ஒளி மூலம் புத்தாண்டு கொண்டாட்டம்.. வண்ண விளக்குகளால் மிளிர்ந்த கோவை : இளைஞர்கள் நடனமாடி உற்சாகம்!

ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடபட்டது. அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது குறிப்பாக கோவை ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளம் பகுதியில் வண்ண லேசர் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு ட்ரோன் கேமராக்கள் கொண்டு புத்தாண்டு வாழ்த்து பகிரபட்டது.

இதில் புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடபட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர். வாலாங்குளத்தில் பாலத்தின் மீது பட்டாசுகள் வரிசையாக வெடிக்க வைத்து காண்போரை வியக்கும் அளவில் பட்டாசுகள் வான வேடிக்கை இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பல ஆயிரம் கணக்கான மக்கள் கண்டுகளித்ததுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். குழுக்களாக வந்த பொதுமக்கள் கேக் வெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கோவை வாலாங்குளம் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிகமான மக்கள் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளிநாட்டு பறவைகள், நாரை, கொக்கு, பெலிகன் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாக இருக்கும் வாலாங்குளத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என பல்வேறு சுற்று சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்