இடிபாடுகளுக்கு சிக்கி 3 நாட்களாக தவித்த பிறந்த நாய்க்குட்டி : காப்பாற்றி பாலூட்டிய தீயணைப்புத்துறை… கண்ணீர் விட்ட தாய் நாய்..!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 2:42 pm
காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எம்ஜிஆர் நகர் 5 வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாயொன்று குட்டிகளை ஈன்றெடுத்தது.
அதில் ஒரு குட்டியானது அப்பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள இடிபாடுகளுக்குள் தலைகீழாக சிக்கி மூன்று நாட்கள் தவித்து வந்தது.
இதையடுத்து ஜெய்சங்கர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நாய்க்குட்டியை உயிருடன் மீட்டு அதற்கு உடனடியாக பால் ஊட்டிய மனிதாபிமான சம்பவம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது
மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கிய தனது நாய்க்குட்டியை மீட்க்கும் போது தாய் நாய் அருகில் இருந்து பார்த்த காட்சி அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.