பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ஜோடியாக செல்லும் புதுமண தம்பதிகள்? எல்லாத்துக்கும் தயாராதான் இருக்காங்க போல..!

Author: Vignesh
27 September 2022, 3:37 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து வரும் அக்டோபர் மாதம் 6-வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் டி இமானின் முன்னாள் மனைவி, தொகுப்பாளினி டிடி, குக் வித் கோமாளி ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது அப்டேட் தெரிவித்துவரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் இதுகுறித்து புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனின்போதும் காரசாரமாக விமர்சனம் செய்தவர் ரவீந்தரன் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரவீந்தர் – மகாலட்சுமி திருமணம் குறித்தும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து அவர் வெளியிடும் கருத்துக்களை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?