கோவை : பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞரை மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் (தினத்தந்தி) புகைப்பட கலைஞர் விவேக் கோவை புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தனது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக, புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து பார்க்கிங்கை தயார் செய்துள்ளார்.
அந்த இடத்தில் அவருடைய வீட்டு அருகே இருந்த ஒரு நபர் காரை கொண்டு நிறுத்திவிட்டாராம். அதனால், இரவு ஏழு மணிக்கு வந்த விவேக் அவரிடம் தங்களது காரை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். அவர் நான் எடுத்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இவரும் அதைப்பற்றி கேட்கவில்லை.
இரவு 12 மணி அளவில் மது போதையில் வந்த அந்த நபர் விவேக்கின் வீட்டை தட்டி, “நாங்கள் அப்படித்தான் எங்களது காரை நிறுத்துவோம். உனக்கு என்ன வந்தது,” என்று கூறி விவேக் பலமாக கட்டையாலும், கல்லாலும் தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக கேட்டதற்கு, ‘நாங்கள் எல்லாம் திமுக கட்சியை சார்ந்தவர்கள். எங்களை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. வழக்கு பதிவு செய்தாலும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,’ என்று சொல்லி உள்ளனர்.
இதனிடையே, அவர்கள் தாக்கியதில் மயங்கிய விவேக்கை, பக்கத்து வீட்டார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து தற்பொழுது கங்கா மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
கார் நிறுத்தும் விவகாரத்தில் செய்தியாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.