மக்களே உஷார்… அடுத்த 24 மணிநேரத்தில் அந்த 4 மாவட்டங்களில்…. வெளுத்து வாங்கப்போகும் கனமழை…!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 2:06 pm

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளரை சந்தித்த தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருப்பூரில் பதினேழு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் கனமழையும், ஐந்து இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரை அடுத்து ஒரு மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஊரில் இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

எனவே, ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் பதிவான மழை அளவு 24 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 31 சென்டிமீட்டர் இது இயல்பை விட 15 சதவீதம் குறைவாகியுள்ளது.

  • big boss balaji new movie news பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!
  • Views: - 264

    0

    0