அடுத்த 5 வருடம் மோடியோட ஆட்சி.. ரொம்ப மகிழ்ச்சி : கட்சி எதை கொடுத்தாலும் ஏற்க தயார்.. தமிழிசை..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 12:15 pm

காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவுடைய ஓட்டுகள் சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்லும் முன் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

ஸ்டாலின் சுயநலத்திற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடியவர். பாஜகவினர் தமிழக மக்களுக்காக போராடி எல்லா பணிகளையும் செய்வோம்.

அரசியல் வாழ்க்கையில் எந்த பதவியையும் எதிர்பார்த்து சென்றதில்லை. கட்சி எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பேன்..

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எனது கருத்தை வலுவாக கூறுவேன். டெல்லியில் அத்தனை பெரிய கூட்டத்தில் தமிழகத்தை பற்றி பேசி தமிழ்நாட்டை மோடி அங்கீகரித்துதுள்ளார்.

பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் பாமக ஓட்டுகள் என காங்கிரஸ் கூறுமாயின் காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவுடைய ஓட்டுகள். காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்.

திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லையே என்பதை விட காங்கிரஸுக்கு திமுகவுக்கும் இடம் கிடைத்தும் பலன் இல்லை என்பதுதான் கவலை.

மேலும் படிக்க: கணக்கு தெரியாம என்னத்த படிச்சாரு ப.சிதம்பரம்.. அரசியலில் இருக்க அருகதையே இல்ல : ஹெச் ராஜா ஆவேசம்!

டெல்லிக்கு மிகவும் மகிழ்ச்சியோடு செல்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாரத பிரதமர் மோடி நாட்டை ஆளப்போகிறார் என்பதை கேட்கும் போது ஆழ்ந்த மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!