இளைஞர் உயிரிழந்த அதே இடத்தில் தொடரும் அடுத்தடுத்த விபத்து.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. பகீர் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2023, 8:34 am
இளைஞர் உயிரிழந்த அதே இடத்தில் தொடரும் அடுத்தடுத்த விபத்து.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. பகீர் சிசிடிவி காட்சி!!
சந்திரகாந்த் விழுந்து உயிரிழந்த அதே நாளில் அங்கு ஏற்பட்ட பல்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (29.09.2023) இரவு கொடிசியா பகுதியில் உள்ள கீதாஞ்சலி என்ற தனியார் பள்ளி அருகில் அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தால் போடப்பட்ட வேகத்தடையில் வெள்ளை கோடுகளை குறிப்பிடாத காரணத்தினால் அவ்வழியாக வந்த சந்திரகாந்த்(26) என்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர்.
மேலும் அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் வேக தடைகளை யாரும் அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சந்திரகாந்த் விழுவதற்கு முன்பு அதே நாளில்(29.09.2023) அந்த வேகத்தடையால் பல்வேறு வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்துள்ளனர்.
அவர்களும் வேகத்தடை அங்கு அமைக்கப்பட்டு இருப்பதை உணராமலும் வெள்ளை கோடு இல்லாததால் நிலை தடுமாறி விழுந்தவர்களே ஆவர். தற்பொழுது அவ்விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.