வரும் சனிக்கிழமை.. திமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு முக்கிய உத்தரவு போட்ட தலைமைக் கழகம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 4:38 pm

வரும் சனிக்கிழமை.. திமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு முக்கிய உத்தரவு போட்ட தலைமைக் கழகம்!

திமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு பின் வருமாறு; ”’தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி’யின் முன்னெடுப்பில் வருகிற 13.01.2024 (சனிக்கிழமை) அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான “சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு” நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கழக இளைஞர் அணி – மாணவர் அணி மகளிர் அணி – தொண்டர் அணி – தொழிலாளர் அணி வழக்கறிஞர் அணி – பொறியாளர் அணி – மருத்துவ அணி விளையாட்டு மேம்பாட்டு அணி – சிறுபான்மைநல உரிமைப் பிரிவு விவசாய அணி – விவசாயத் தொழிலாளர் அணி – சுற்றுச்சூழல் அணி – அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, அந்தந்த மாவட்டக் கழகத்தை அணுக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 343

    0

    0