கோவையில் அடுத்த அதிர்ச்சி… கல்லூரி மாணவன் குத்திக் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 4:27 pm

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்குமார். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர்களும், அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) என்பவரது நண்பர்களுக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

மது போதையில் இருந்த இரண்டு குழுவினரும் சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஷ்குமாரை குத்தியுள்ளனர்.

இதையடுத்து படுகாயத்துடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்