ஆம்ஸ்டிராங் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : கவுன்சிலர் கைது.. காட்டிக் கொடுத்த செல்போன்!
Author: Udayachandran RadhaKrishnan20 ஜூலை 2024, 8:10 மணி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ., என பல்வேறு கட்சியை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் பிரமுகர்கள் என 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இவ்வழக்கு விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்றதாக திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஹரிதரன் என்பவர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஹரிதரன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான வக்கீல் அருள் என்பவரின் செல்போன் ஹரிதரனிடம் இருந்ததால் அதன்பேரில் போலீசார் ஹரிதரனை கைது செய்தனர். ஹரிதரன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய பா.ஜ.,முன்னாள் நிர்வாகியான அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட தனிப்படை போலீசார் அங்கிருந்த 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பென்டிரைவ் பேங்க் பாஸ்புக், லேப்டாப் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
0
0