திருச்சியில் கைதிகளுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? மத்திய சிறையில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை..!

Author: Babu Lakshmanan
19 December 2022, 12:41 pm

திருச்சி ; திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு என்.ஜ.ஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவர்களை சோதனை செய்ததில் சில ஆவணங்கள், தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து சிலரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய புலனாய் முகமையின் துணை கண்காணிப்பாளர் தர்மராஜ் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்களா அல்லது இங்கேயே விசாரணை செய்யப்படுவார்களா என்பது இதுவரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, NIA கண்காணிப்பாளர் தர்மராஜ் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியதாவது :- இது தொடர்பாக குற்ற பத்திரிக்கை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளேன். இலங்கை சேர்ந்தவர்களிடம் விசாரணை பார்க்க உள்ளனர். கடிதம் மட்டுமே வழங்கி உள்ளனர். தற்போது 152 நபர்கள் உள்ளனர். இதில் 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 631

    1

    0