கோவையில் மீண்டும் என்ஐஏ சோதனை.. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் ரெய்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 11:52 am

கும்பகோணம், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. மதமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் ராமலிங்கம் கொலை தொடர்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள HMPR வீதியில் பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 335

    0

    0