சென்னையில் பயங்கரவாதிகளின் நடமாட்டமா…? புறநகர் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை…!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 9:17 am

சென்னையில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் சென்னையில் வசித்து வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முன்னா என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சோதனைகள் முடிந்த பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று தெரிகிறது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!