மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் விசாரணை… ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பா..? அதிகாலையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 9:49 am

மதுரையில் முகமது தாஜுதீன் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை – பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காஜிமார் தெருவில் முகமது தாஜூதீன் அஜ்மல் என்பவரது வசித்து வருகிறார். இவர், இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்ஐஏக்கு தகவல் வந்துள்ளது. அவர்களுடன் இவர் தொடர்பில் இருந்தாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், முகமது தாஜுதீன் அஜ்மலின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தாஜூதீன் அஜ்மல் என்பவரிடம் விசாரணை நடத்த சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் என்ஐஏ அதிகாரிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது தாஜுதீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 399

    0

    0