ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், அபி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்
என்ற பெயரில் ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.
இவரது டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் மாற்றி கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், கோவில்களுக்கு சென்றுவர முன்பதிவு செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.
இதற்காக தனது இணையதளம் மூலமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வந்தார். இந்நிலையில் அசோக்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் ஏஜென்சியை மூடிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனாலும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கேட்கும் பொழுது வெளிநாட்டு பணத்திற்கு இந்திய பணத்தை மாற்றி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு (Nathan ikechukwu) (age-42) என்பவர் இணையதள விளம்பரத்தின் மூலம் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு மருத்துவமனை சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பு கரன்சிக்கு பதிலாக இந்திய ரூபாயில் பணம் தேவை என கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வுவை வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பின்னர், அமெரிக்க டாலரை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக் குமார் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் இடம் புகார் தெரிவித்தார்.
இதன் பேரில் தனிப்படை அமைத்த காவல்துறையினர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவை கைது செய்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே கோவை காட்டூர் பகுதியில் இதேபோன்று வெளிநாட்டு கரன்சியை போலியாக கொடுத்து கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நாதன் இகேச்சுக்வு.வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஈரோட்டில் அமெரிக்க டாலர் மதிப்பிலான போலியான பணத்தை கொடுத்து ஏமாற்றிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.