இலந்தை பழத்திற்காக கரடி செய்த செயல்.. முதுமலையில் நிகழ்ந்த சுவாரஸ்யம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 5:13 pm

நீலகிரி ; முதுமலை புலிகள் காப்பகம் அருகே இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வரத் தொடங்கி உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் கரடி, புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டத்தை காண முடிகிறது.

இந்நிலையில் மாயார் சாலையில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையோரத்தில் இருந்த இலந்தை பழம் மரத்தில் ஏறி பழங்களை சாப்பிட முயன்றது. இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். தற்போது கரடி மரத்தில் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவ்வாறு சாலை ஓரங்களில் வரும் வனவிலங்குகளை எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!