2ஜி-யா…? மோடிஜி-யா..? பழங்குடியினருடன் நடனமாடி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் எல்.முருகன்..!!!
Author: Babu Lakshmanan12 April 2024, 5:36 pm
நீலகிரி மாவட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் உதகையில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பழங்குடியினருடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பஜக வேட்பாளர் எல்.முருகன் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மசினகுடி, தொரபள்ளி, மண்வயல், கூடலூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சாரம் செய்தார். மசனிகுடி பகுதியில் பேசிய எல் முருகன் பழங்குடியினருக்கு மத்திய அரசின் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், பழங்குடியின மக்களில் படித்த இளைஞர்களுக்கு, பெண்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க: மும்பையில் இருந்து வந்த தங்கம்… சுமார் ரூ.4.50 கோடி மதிப்பு… பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!!
அதேபோல் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்பு, கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.முருகன், இந்த ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பாஜகவின் ஊராட்சி தலைவர் நான்கு முறையாக வென்றுள்ளதாகவும், காரணம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதால் இந்த ஸ்ரீ மதுரை ஊராட்சி பாஜகவின் கோட்டையாக உள்ளதாக தெரிவித்தார்.
கூடலூரில் உள்ள நிலப்பிரச்சனை தீர்க்கப்படும் எனக் கூறிய எல்.முருகன், இதே ஊராட்சியில் பழங்குடியின பெண்கள் வார்டு கவுன்சிலராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் எனவும், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து இந்து மதத்தை இழிவாக பேசி வரும் ஆ ராசாவிற்கு பாடம் புகட்டும் வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து மீண்டும் பாரத பிரதமரை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்பு உங்கள் ஓட்டு தாமரைக்கு என பிரச்சார வாகனத்தில் இருந்து கோஷமிட்டார். அதன்பின்பு கீழே இறங்கிய எல்.முருகன் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.
பின்பு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடிய பொழுது அவரும் நடனமாடி மகிழ்ந்தார். நீலகிரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் L.முருகனின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
முன்னதாக, எல்.முருகன் இன்று உதகையிலிருந்து மசினகுடி பகுதிக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது, சீகூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் L.முருகனின் காரை நிறுத்தினர். பின்பு அவரின் காரை முழுமையாக சோதனை செய்தனர். காரில் சோதனை செய்தபோது எல் முருகன் காரில் இருந்து கீழே இறங்கினார். முழு சோதனைக்கு பின்பு எல்.முருகன் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.