‘தாய் போலே தாங்க முடியுமா..?’… முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 2:39 pm

முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் அருணா கதறி அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் நூறு வயதை கடந்த முதியவர்களை கௌரவப்படுத்தும் விழாவானது நடைபெற்றது. அதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. அருணா கலந்து கொண்டார். அப்போது, பெற்ற மகன் மற்றும் மகள்களால் கைவிடப்பட்ட தாய் மற்றும் தந்தையர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

அந்த நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் முன்பாக, தமிழ் பாடல் ஆன ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்க முடியுமா..?’ என்ற பாடலுக்கு அங்கு உள்ள முதியவர்கள் நடனம் ஆடினார்கள்.

இதனை கண்டு களித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கண்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சமாதானம் செய்தனர்.

இதனை அடுத்து அங்குள்ள மூதாட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சோகத்துடன் சென்றது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!