‘அதிமுகவுக்கு ஓட்டு கேட்டா வர்ர’… பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள்… போலீஸில் புகார்..!!
Author: Babu Lakshmanan2 April 2024, 4:33 pm
.நீலகிரி ; அதிமுகவுக்கு ஓட்டு கேட் வந்ததாக நினைத்து பள்ளி ஆசிரியர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே உள்ள தேவாலாவில் அமைந்துள்ள அட்டி எனும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும், அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!
அப்போது, அதே பகுதியில், திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்களில் ஒருவரின் கணவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில், பள்ளி ஆசிரியர்களை வைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவரை திமுக நிர்வாகிகள் தாக்கியுள்ளனர். இதில், அவர் சட்டை எல்லாம் கிழிந்து நிலைகுந்து போனார். பின்னர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: அண்ணாமலை என்ன பெரிய ஞானியா..? ஜெயிலே எங்களுக்காகத் தான் கட்டி வச்சிருக்காங்க… செல்லூர் ராஜு நக்கல்…!!
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு பெண் உறுப்பினர்களை மிரட்டிய, திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேவாலா காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.