சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை துரத்திய காட்டு யானை… சுற்றுலா பயணிகள் நூலிழையில் எஸ்கேப்.. பதற வைக்கும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 April 2024, 3:29 pm

முதுமலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை தாக்க சென்ற யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது கடும் வரட்சி நிலவுகிறது. இதனால், காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி பிரதான சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றன. மாலை நேரங்களில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சாலைகளில் பயணிக்கின்றனர்.

மேலும் படிக்க: முதலமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் : ரூ.3.60 கோடி பறிமுதல் செய்ததால் பரபரப்பு!!

இந்த நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் பொழுது இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க வந்தன. அந்த சமயம், திடீரென சுற்றுலா பயணிகள் வாகனத்தை கண்ட காட்டு யானை புழுதி பறக்க வாகனத்தை தாக்க ஓடி சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டனர்.

பின்பு சுற்றுலாப் பயணிகள் வேகமாக வாகனத்தை எடுத்து தப்பித்தனர். இதனால் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் சுற்றுலா பயணிகள் தப்பித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1520

    0

    0