பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த தாய் உள்பட 9 பேர் கைது

Author: kavin kumar
17 February 2022, 1:28 pm

விருதுநகர் : விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (25). இவரது கணவர் இறந்த நிலையில் 2வது திருமணம் செய்து உள்ளார். இவருடைய ஒரு வயது பெண் குழந்தை விற்கப்பட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் குழந்தையை விற்ற கும்பலை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கலைச் செல்வி மற்றும் கலைச்செல்வியின் தந்தையான கருப்புசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் குழந்தை இடைத்தரகர்கள் மூலம் மதுரையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து குழந்தையை சூலக்கரை காவல் நிலைய போலீசார் நேற்றிரவு மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மீட்டனர். மேலும் குழந்தை விற்க பயன்படுத்திய இரண்டு கார்கள், 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தை சூலக்கரை காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையின் தாத்தா கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினர் கருப்பசாமி -பிரியா, இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக், மகேஸ்வரி, மாரியம்மாள் மற்றும் கார் ஓட்டுநர் செண்பகராஜன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது நபர்களை குலக்கரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1687

    0

    0