சிறுவனை காவு வாங்கிய நிபா வைரஸ்.. கேரளாவில் இருந்து கோவைக்கு பரவலா? எல்லையில் தீவிர சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 5:06 pm

கேரளா கண்டறியப்பட்ட நிஃபா வைரஸ் எதிரொலி காரணமாக கோவை கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மேலும் அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருவருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம்,மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கோவை வரும் பொது மக்கள் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சோதனைக்கு பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும் வரை தமிழக மக்கள் கேரள மாநிலம் செல்வதை தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu