மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா : கைலாசாவில் இருந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவை வழங்கி சொற்பொழிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 1:04 pm

மதுரை : கைலாச நாட்டிலிருந்து நேரலை மூலமாக மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினம்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள நித்தியானந்தம் ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தவாறே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தி, தொடர்ந்து நித்தியானந்தாவின் உத்தரவின்படி தான் சித்திரை திருவிழாவை காண்பதை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் மேலும் பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களை வழங்கவும் அறிவுறுதியுள்ளார்.

அதன்படி பிரதியேக காட்சி பதிவுகள் நித்தியானத்திற்கு அனுப்பி, ஆசிரமம் சார்பாக அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பித்து பட்டாடைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஆசிரமம் சார்பில் அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டது, அதனை ஏராளமான பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!