FIRE ஆட்டம்…புஷ்பா ஸ்டைலில் மாஸ் காட்டிய நிதிஷ் ரெட்டி…திணறிய AUS பவுலர்கள்..!

Author: Selvan
28 December 2024, 12:57 pm

நிதிஷ் குமார் சாதனை – ரசிகர்கள் உற்சாகம்

AUS VS IND மெல்போர்ன் டெஸ்ட் மேட்சில் இன்றைய 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா பவுலர்களை நாலா புறமும் சிதறடித்து,தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

Nitish Kumar Reddy maiden century

இன்றய நாள் ஆட்டத்தின் போது சிறிது நேரத்தில் ரிஷப் பந்த்,ஜடேஜா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து,இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது.அப்போது ரிஷப் பந்த் அடித்த தவறான ஷாட்டை,நேரலையில் கமெண்ட்ரி பண்ணிட்டு இருந்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கடுமையாக கண்டித்தார்.

முட்டாள்…முட்டாள்…ரிஷப் பந்துக்கு இந்த ஷாட்டை தவிர வேற எதும் தெரியாது, இப்படியே ஆடிட்டு இருந்தால் கூடிய விரைவில் வெளியே உட்கார வேண்டிதான் என ஆக்ரோஷமாக பேசினார்.

இதையும் படியுங்க: தம்பி ஓரளவுக்கு தான் கொல காண்டில் விராட்கோலி…ஷாக் ஆன ஆஸ்திரேலியா ரசிகர்கள்…!

அதன்பின்பு களத்தில் பொறுமையாக ஆடி வந்த நிதிஷ் மற்றும் வாஷி ரன்களை மெது மெதுவாக குவித்தனர்.நிதிஷ்குமார் தனது முதல் அரைசதத்தை அடித்தவுடன் புஷ்பா அல்லு அர்ஜுன் ஸ்டைலில் கொண்டாடினார்.மறுபக்கம் தமிழக வீரரான வாஷியும் அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்து பெவிலியன் திரும்பினார்.

நிதிஷ் குமார் ரெட்டி தன்னுடைய முதல் சதத்தை நெருங்கும் போது அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் ஆட்டம் விறுவிறுப்பானது.அவர் 99 ரன்களில் இருக்கும் போது பவுண்டரி அடித்து,தன்னுடைய முதல் சதத்தை மெல்போர்ன் மண்ணில் ருசித்தார்.

அப்போது மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள்,அதிலும் குறிப்பாக அவருடைய அப்பா சந்தோசத்தின் எல்லைக்கே சென்றார்.பின்பு,போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இன்றைய 3-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது .இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை குவித்துள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!