புகாரளித்தும் NO ACTION.. களத்தில் இறங்கிய அதிமுக பெண் கவுன்சிலர் : தூய்மை பணி செய்த வீடியோ வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2023, 2:31 pm
கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணியை மேற்கொள்ளப்படாததால்,பெண் கவுன்சிலர் ஒருவர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டது வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கவுன்சிலர் தூய்மை பணி மேற்கொள்ள தெரிவித்தும் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை.
பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்களாக காட்சியளித்து சமூக விரோதி கூடாரமாக மாறியது.
இதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கபடாததால் இங்கு இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டதோடு மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
தற்போது பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ வைராலகி வருகிறது.