பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். நான் நேற்றே இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுப் பல படுகொலைகள் நடந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் 6 படுகொலை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. சேலம் சன்முகம் கொலை, ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினரை கைது செய்துள்ளனர். இவர்கள் 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரண்டர் ஆனர்கள்.ஆனால் முதல்வரின் காவல் துறை கைது செய்ததாக தவறாக சொல்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த கொலை, உயிரிழ்ப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கு தான் வருகிறது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள திருமா, செல்வப்பெருந்தகை இருவரும், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். பட்டியல் சமூக மக்களின் பாதுகாவர்கள் என சொல்லும் திமுக தற்போது பட்டியல் சமூக மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது. என பட்டியல் சமுக மக்கள் சார்பாக கேள்வி எழுப்புகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் செய்க்கூலி, சேதாரம் இல்லாமல் 40/40 வென்றெடுத்ததாக முதல்வர் சொல்கிறார். ஆனால் பட்டியல் சமூக மக்களுக்கு தினுமும் சேதாரம் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மதுவில் கிக் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநரை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம்.
ஆனால் போதைப்பொருளை விட ட்ரக்ஸ் கொடூரமான போதைப்பொருள் இது இளைஞர்ஙளை குறி வைத்து விற்பனை செய்யப்படுகிறது என ஆளூநர் ரவி எங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்தாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
விக்கிரவாண்டி தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்க போகிறோம். இதில் இடைத்தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்பதற்கும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் எல்லாத் தேர்தலிலும் தேமுதிக போட்டுயிட்டது. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பணம் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அராஜகம் செய்து வெற்றி பெற்றனர்.
ஆனால் இதை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் எதற்கோ சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார்கள் தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை என பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.