பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணையும்… 3வது அணிக்கு வாயப்பில்லை : காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 10:49 am

தஞ்சாவூர் : இந்திய அளவில் 3 வது அணிக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்

தஞ்சாவூரில் நடைபெற்ற மகாத்மா காந்தி உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நினைவு காங்கிரஸ் எழுச்சி நடைபயணம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கேவி தங்கபாலு அளித்த பேட்டியில், இந்திய அளவில் மூன்றாவது அணி என்பது நடக்காது; அதற்கு வாய்ப்பே கிடையாது.

ஆனால், இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து சுதந்திரத்தை விரும்புகிற, ஜனநாயகம், சமூக நீதியைக் காக்கிற சக்திகள், கட்சிகள் இணையப் போகின்றன. இதைத்தான் தில்லியில் தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் சோனியா காந்தி தலைமையில் அமைந்த கூட்டணி இரு முறை நல்லாட்சியைக் கொடுத்தது. இப்போது மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையில் நல்லாட்சி இயக்கம் வரும். அதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும்.

தேசியத்தில் நம்பிக்கையுள்ள, ஜனநாயக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைவர் என்பது நடக்கும். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுக்கும் என்றார். மேலும் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது மத்திய அரசின் நிறுவனம் தான் காரணம் எனவும் அவர் கூறினார்

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1468

    0

    0