EXIT POLL முடிவுகளில் நம்பிக்கை இல்லை.. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்லும்.. சொல்கிறார் துரை!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 6:50 pm
Durai vaiko
Quick Share

மதுரை அலங்காநல்லூர் அருகே தண்டலை பகுதியில் மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு மதிமுக முதன்மைச் செயலாளர் துறை வைகோ செய்தியாளரிடம் பேசியபோது, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

இது நூறு சதவீதம் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது ஆகையால் 100% தமிழகத்தில் வெற்றி பெறுவோம்

ஆனால் மத்தியில் பிஜேபி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பிற்கு இன்னும் 48 மணி நேரம் பொறுத்து இருக்க வேண்டும் 48 மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்.

தற்போது நடைபெறும் அசாம் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா முன்னிலை வகிப்பது அந்த மாநிலத்தில் உள்ள பிரச்சனையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் இந்திய அளவில் இந்தியா கூட்டணியே 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். இன்னும் 48 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த உண்மை தெரிய வரும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியதாக கேள்விக்கு
அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துக்களையும் வதந்திகளை மட்டுமே சொல்லி வருகிறார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்
ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் எனவும் அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு எனவும் கூறினார்

தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மதிமுகஇடம் பெறுமா என்ற கேள்விக்கு அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் மத்திய அமைச்சரவையில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது என்று கூறினார்.

Views: - 176

0

0