3 நாட்களாக உணவு ஆர்டர் கொடுக்கவில்லை : கோவையில் Zomato ஊழியர்கள் திடீர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 2:20 pm

கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் ப‌குதியில் 100க்கும் மேற்பட்ட‌ சொமேட்டோ ஊழிய‌ர்க‌ள் திடீர் போராட்ட‌த்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனமாக சொமேட்டோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் டெலிவரி பணியி உள்ள ஊழியர்களுக்கு சொமேட்டோ நிறுவனம் கடந்த 3 நாட்க‌ளாக‌ ஆர்ட‌ர் எதுவும் கொடுக்க வில்லை என்று கூறியும், ஊதியத்தை முறையாக தருவதில்லை, செயலியில் ‘கிக்’ என்ற‌ வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுதுவ‌தால் அதிக‌ம் பேர் பாதிக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ஊழியர்கள் குற்றம்சாட்டின‌ர்.

இதனிடையே ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போரட்டத்தில் ஈடபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி