நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? மீண்டும் நகைக்கு வட்டி கட்ட சொல்லி நோட்டீஸ்… கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பயனாளிகள்!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 7:42 pm

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி எங்களுக்கு செய்யவில்லை என்று
திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச்எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் மேல் முறையீடு செய்தும், எவ்வித பதிலும் இல்லாமல் மீண்டும் நகைக்கடனுக்கு வட்டி கட்ட வங்கி நோட்டிஸ் அனுப்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமடைந்தனர். இதனால், அவர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, தங்களுக்கு வீடு மற்றும் நிலம் என ஏதுமின்றி வசித்து வரும் நபர்களாக இருந்து வரும் நிலையில், கூட்டுறவு வங்கியில் வைத்திருந்த குறைந்த எடை கொண்ட நகைகள் 18 கிராம் நகை மட்டுமே வைத்திருப்பதாகவும், ஆனால், 100 கிராமிற்கு மேலாக நகை வைத்தது போல் பதிவாகியுள்ளதால், நகை கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, முறையான ஆவணங்களை பதிவு செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மனம் வேதனை அடைந்த கூலித் தொழிலாளிகள், செயலாளர் மற்றும் தலைவரை கண்டித்து கையில் மண்ணெண்ணெய் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தகவல் அறிந்து வந்த சாத்தனூர் அணை காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேசியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு, இரண்டு நாட்களில் முறையான தகவல் அளிக்கப்படும் என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 472

    0

    0