இந்தியாவில் மொழி திணிப்பு இல்லை.. புதிய கல்விக்கொள்கையால் மற்ற மாநிலங்களில் தமிழ் பரவும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 4:49 pm

கோவை : மொழித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் பொன்முடி கருத்து ஆளுநர் ஆர் என் ரவி பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களையும் பதங்கங்கங்கையும் வழங்கியவ ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் என தமிழில் வாழ்த்து கூறிய ஆளுநர், பட்டம் பெற்றவர்கள் புதிய வாழ்க்கையில் நுழைய போகின்றீர்கள் எனவும் நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்து கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கபட்டு உள்ளதாகவும் ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நிலையில் இந்த அரசு கவனம் செலுத்துகின்றது எனவும், மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை எனவும் இந்தியையும் திணிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது எனவும் மாநில மொழிகளிலேயே நடத்தப்படுகின்றது.

பிரதமர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தாய்மொழியை கொண்டு வர பேசி வரும் நிலையில் மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

தமிழ் மொழி சிறந்த உயர்ந்த மொழி என கூறிய ஆளுநர் பிறநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்திருப்பதை போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைகழகங்களிலும் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுகொண்டதோடு சுப்ரமணிய பாரதி பெயரில் பனராஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.

எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும் எனவும் புதிய கல்விகொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பாக இருக்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 908

    0

    0