திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 9:44 am

திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு!

திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் முன்னாள் எம்பி கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வருவது என்றால் அதிமுகவில் மட்டும்தான் முடியும் என்றும் திமுகவில் அமைச்சரின் மகன் வாரிசுகள் குடும்பத்தினர் மட்டுமே எம்பியாகவும் எம்எல்ஏவாகவும் வர முடியும் என்றும் அதிமுகவில் உழைத்தால் உயர்ந்த பதவிக்கு சாதாரண தொண்டனும் வரமுடியும் என்றும்
15 கட்சி கூட்டணி வந்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது என பேசினார்.

மேலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை உரிமைத்தொகை
வெள்ள நிவாரணம் போன்றவை முறையாக வழங்கவில்லை என்றும்
அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பதாகவும்
போக்குவரத்து தொழிலாளர்கள் மாணவர் சமுதாயம் போராடிக் கொண்டிருப்பதாகவும், பெண்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், கச்சத்தீவு காவேரி பிரச்சனை மீத்தேனில் கையெழுத்து இட்டது என அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு எல்லா உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார் .

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் தையல் இயந்திரம்
இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்
மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…