நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் எது வந்தாலும் எடப்பாடியாருக்கே வெற்றி : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 7:44 pm

முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்தும், கோவை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்தும், குணியமுத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் திமுக அரசு 20 மாதங்களாக எதுவும் செய்யாமல் புறக்கணிக்கிறது.

இன்று கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மந்தகதியில் நடக்கிறது பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த திட்டங்களை எல்லாம் உடனடியாக முடிக்க வேண்டும் அதே சமயம் சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு தமிழகம் என அனைவரும் அழைக்கலாம் என கூறியது குறித்து கருத்து கேட்டதற்கு அது குறித்து நான் பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அதிமுக தான் அதன் பிறகு தான் திமுக மற்ற கட்சிகள் எல்லாம். எடப்பாடி தலைமையில் இருக்கின்ற அதிமுக தான் ஒரே அதிமுக. வருகின்ற நாடாளுமன்றம் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் நிச்சயமாக வெல்வார் என தெரிவித்தார்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!