விழுப்புரம் : தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாகவும், நகர்புற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் ரொட்டிகார வீதியிலுள்ள 20 வது வாக்கு சாவடி மையத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் தனது ஜனநாயக குடியுரிமையான வாக்கினை தைலாபுரத்திலிருந்து காரில் வந்து வாக்கினை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானது என்றும் மக்களே ஆட்சி செய்வதற்காக ராஜீவ் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவில்லை. அங்கு நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக குற்றஞ்சாட்டிய அவர் வறுமை ஒழிப்பு, சுகாதாரம் , சாலை அமைத்தல் நடைபெறும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயாட்சி நடைபெற வேண்டும் ஆனால் சுயாட்சி நடைமுறையில் இல்லை என்றும் ராஜீவ் காந்தி நினைத்தது நிறைவேறவில்லை கூறினார்.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரத்தினை அளிக்க வேண்டும் எனவும் உள்ளாட்சியில் உள்ள பிரதிநிதிகளை எளிதில் பார்க்க முடியும் என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் முக்கியமானது என்பதால் உள்ளாட்சி தேர்தலில் 18 வகையான பணிகள் நடைபெறும் என்றும் நகர்புற தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும் பாட்டாளி கட்சிகளுக்கு வாக்களுக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாகவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பார்த்தால் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என்றால் பாமகவில் வேட்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.