இனி கூட்டணியே கிடையாது… ஆடுகளை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்க : அண்ணாமலை சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 4:02 pm

டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம் என்றார்.

அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டால் 30 முதல் 35 இடங்களை தமிழகத்தில் வென்றிருக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது குறித்து கேட்டபோது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க: சவால் விட்ட பாமக பிரமுகர் எங்கே? அண்ணாச்சியை கண்டா வரச் சொல்லுங்க.. திமுகவினரின் வீடியோ வைரல்!

மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார் என்றார். கோவை மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டதாக கூறிய அண்ணாமலை, தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறினார். படிப்படியாகத்தான் வெற்றியை எட்ட முடியும் எனக் கூறிய அவர் பாஜக கோவையில் அதிகமாக வாக்குகள் பெற்று, இரண்டாம் இடத்தில் முன்னேறி உள்ளது என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது, அதை அவர்கள் முதலில் சரி செய்து கொள்ளட்டும் என தெரிவித்தார்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?