இனி DD பொதிகை இல்லை… புதுப்பொலிவுடன் மாற்றம் : பெயரை வெளியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 2:42 pm

இனி DD பொதிகை இல்லை… புதுப்பொலிவுடன் மாற்றம் : பெயரை வெளியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருதோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம்.

ஜனவரி மதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே போல, எங்கள் DD நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். இனி அவர்களும், முதல்வர் முதல் அனைவரிடத்திலும் கேள்வி கேட்பர்.

இதற்காக வெளியில் இருந்து தற்போது ஆட்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நிரந்தரமாக ஆட்களை நியமிப்போம். பிரதமர் மோடி குறிப்பிட்டது போல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என தூதரஸன் பொதிகை சேனலில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

அடுத்து தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்து கேட்கையில், இது நமது நாடு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இது இரு நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?