இனி தக்காளிக்கும் மவுசு…. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் உயர்வு : மற்ற காய்கறிகள் விலையையும் தெரிஞ்சுக்கோங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
8 மே 2022, 10:30 காலை
Tomato Rate - Updatenews360
Quick Share

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.

மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதே சமயம், முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும், ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் , உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 1021

    0

    0