குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது : ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுக பதிலடி?!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 12:49 pm

குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது : ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுக பதிலடி?!

தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார். மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 319

    0

    0