யாருமே எதிர்பார்க்கல.. அரசியல் களத்தில் ட்விஸ்ட் : கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு.. மநீம வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 8:53 pm

யாருமே எதிர்பார்க்கல.. அரசியல் களத்தில் ட்விஸ்ட் : கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு.. மநீம வரவேற்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்து தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ளது. அதன்படி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல்பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 663

    0

    1