கோவையில் மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடலுக்கு திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கனிமொழி எம்பி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் கோவை தங்கம். இவர் 14.1.1949 அன்று பிறந்தார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் சத்யா தொழிலதிபராக இருந்து வருகிறார்,
இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் இருந்துள்ளார். அதன் பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகவும் பல பதவிகளை ஏற்று அந்த கட்சியில் பணியாற்றி வந்தார்.
2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை வால்பாறை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதேபோல 2006 இல் இருந்து 2011 வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பின்னர் 2019″ல் இருந்து 2021 பிப்ரவரி வரை தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார் பின்னர் மார்ச் ஒன்றாம் தேதி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொண்டையில் ஏற்பட்ட உடல் பிரச்சினை காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. இதனை அடுத்து திமுக தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
1965 ஆம் ஆண்டு மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு கோவை தங்கம் உடலுக்கு திமுக சார்பில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அங்கு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பிற மொழியை கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம் என்னை பற்றியும் , என் வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி அடையாளம், சுயமரியாதை ஆகும்.
மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தின் தொடர்பு கொள்ள ஆங்கிலம் , நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அண்ணா அன்றே கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு. இந்தியாவை பொறுத்தவரை schedule 8″ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும்.
சில மொழிகள் , அலுவல் மொழிகளை கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்.நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்திற்கு பதிலளித்த கனிமொழி தந்தை பெரியார் குறிப்பிட்ட மாதிரி பெண் தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அதை பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.