குமரி வரும் பிரதமரை யாரும் பார்க்க வரவேண்டாம்.. அண்ணாமலைக்கு ஒதுக்கிய அறை ரத்து!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2024, 11:53 am

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு வான்வழி தரைவழி கடற் பகுதியில் போலீசார் தீவிர சோதனை கன்னியாகுமரியில் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் மேலும் 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வருகிறார் அங்கு கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நாளையும், நாளை மறுநாள் என 1-ம்தேதி வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3:55 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி மாலை அரசு பயணிகள் விடுதியில் வந்து இறங்குகிறார்

அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ளும் பிரதமர் மாலை 5 30 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதிலும் போலீசார் கட்டுக்கோப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TTF வாசன் மீண்டும் கைது.. ஜாமீனில் வெளியே வர முடியாதபடி மேலும் ஒரு வழக்கு..!!!

மேலும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை 8 மணி முதல் 10:00 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த போலீசார் 10 மணிக்கு பின்பாக அனுமதியை மறுத்துவிட்டனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனிடையே பாரத பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தனிப்பட்ட முறையில் தியான நிகழ்வுக்காக வருகிறார் என்றும் அரசியல் நிகழ்வாக அதனை மாற்றக்கூடாது என டெல்லி தலைமை தமிழக பாஜகவிற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் விடுதிகளில் தங்க அறைகள் புக் செய்துள்ள நிலையில் தற்போது அதனை ரத்து செய்துள்ளனர்.

மேலும் பிரதமர் மோடியை சந்திக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்றும் டெல்லி தலைமை தெரிவித்துள்ளது

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!