‘நாகரீக சமுதாயத்தில் சித்திரவதைக்கு இடமில்லை’ : வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கோவை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 1:04 pm

சித்திரவதை காவல்துறையின் விசாரணைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  எந்த நாகரீக சமூகமும் எந்த நோக்கத்தை அடையவும் சித்திரவதையைப் பயன்படுத்த கூடாது.

சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் மனித உரிமைப் பிரிவு (HRCDBA) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறை மற்றும் நீதித்துறையினர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சித்திரவதை நடந்தால் நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கும் சுவரொட்டி வெளியிடப்பட்டது.

முதல் பிரதியை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர், கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்படும் என்று உறுதியளித்தார். HRCDBA இன் தலைவர் திரு என்.சுந்தரவடிவேலு தனது சிறப்புரையில், இந்த நாளின் தோற்றத்தை விளக்கினார்.
சித்திரவதைக்கு ஆளானவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த சமுதாயமும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்பதை நம் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அறிவித்ததாக விளக்கினார். 

சட்டத்திலும் நடைமுறையிலும் சித்திரவதை தீமையை ஒழிப்பதுதான் நமது இலக்கு என்றார். திரு . V.P சாரதி தனது உரையில், மனித உரிமைகள் நம்மில் ‘சிறந்தவர்’களுக்கும், ‘மோசமானவர்’களுக்கும் பொருந்தும் என்றும், கருத்து வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து மனித உரிமை கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திரு. ஆர்.பாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் (சிபிஏ) தலைவர்,  செயலாளர் கலையரசன் மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

  • Pavithra Lokesh husband controversy 60 வயது நடிகருடன் காதலா…பண வெறியில் மனைவி…பிரபல நடிகையின் முதல் கணவர் ஓபன் டாக்..!